Home -> News -> Cinema News (page 29)

Cinema News

காதல், ஸ்டைல், வீரம் என்று முப்பரிமாணத்தையும் பிரதிபலிக்கும் கார்த்தியின் ‘தேவ்’

கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி.

Read More »

’வட சென்னை’ படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சிகள் நீக்கம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.

Read More »

சர்கார் படத்தை தடை செய்யக் கோரிய வழக்கு அக்.30-க்கு ஒத்திவைப்பு

சர்கார் படத்துக்கு தடை கோரிய வழக்கில் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதன் பேரில் அக்.30-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More »

தல அஜித் விஸ்வாசம் படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். அவருடன் விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Read More »

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் ‘SK 13’ படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

Read More »

அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் புதியபடம்

நடிகர் சந்தானம், அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்

Read More »

1000 மாணவர்களை ‘எழுமின்’ படத்திற்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம்!

வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Read More »

காமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’

ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கும் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் காமெடி ஹாரர் படமாக தயாராகியிருக்கிறது

Read More »

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னையில் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உடல் நலக்குறைவால் காலமானார். 1936 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகில் உள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தார். இரண்டாம் ஆண்டு இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்த போது, படிப்பைத் பாதியில் விட்டு விட்டு சென்னைக்கு வந்தார்.

Read More »

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர்.

Read More »