" /> My Title page contents
Home -> News -> ஜிம்பாவே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

ஜிம்பாவே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் சுற்றுப்பயணம் செய்து வந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5வது போட்டியில் ஜிம்பாவே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன் குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே, ஆறுதல் வெற்றி பெற மிகவும் போராடியது. முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 233 ரன் மட்டுமே ஜிம்பாப்வே எடுத்தது. இதனால் 131 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் தொடக்க வீரர் பாக்கர் ஸமானுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரின் மூலம், ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை அதிவிரைவாக கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஸமான் படைத்தார். பாபர் அசாமிற்கு ஆட்ட-நாயகன் விருது வழங்கப்பட்டது.