" /> My Title page contents
Home -> News -> National News -> தமிழ்நாடு மாநிலத்திற்கு தேசிய விருது

தமிழ்நாடு மாநிலத்திற்கு தேசிய விருது

1 மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை இதர திட்டங்களுடன் ஒருங்கிணைத்து நாட்டிலேயே சிறப்பாக செயல் படுத்தியமைக்காக, தமிழ்நாடு மாநிலத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இன்று புதுடில்லி விக்யான் பவனில் நடைபெற்ற “மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தின” மாநாட்டில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்கள் இவ்விருதினை வழங்கிட தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி.இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் திரு.க.பாஸ்கரன் இ.ஆ.ப., அவர்களும் உடனிருந்தார்.