Home -> News -> நான் பேசியதை எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள் – பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா

நான் பேசியதை எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள் – பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா

நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசவில்லை. நான் பேசியதை எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் அருகே விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது மேடை அமைக்க அனுமதி வழங்கப்படாததைத் தொடா்ந்து உயா்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசியதாக பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜா உயர்நீதிமன்றம் குறித்து அவதுாறாக பேசுவது போல் வீடியோவில் உள்ளது. இது குறித்து பதிலளித்த ஹெச்.ராஜா, நீதிமன்றத்தை தாம் அவமரியாதையாக பேசவில்லை என்றும் நான் பேசியதை எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள் என பதிலளித்துள்ளார்.