Home -> News -> Business -> திருவொற்றியூரில் Toni & Guy புதிய கிளையை திறந்து வைத்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர்

திருவொற்றியூரில் Toni & Guy புதிய கிளையை திறந்து வைத்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர்

TONI & GUY – ESSENSUALS நிறுவனம் தனது 150 வது கிளையை சென்னை திருவொற்றியூரில் தொடங்கியுள்ளது. பிரபல திரைப்பட நடிகை ப்ரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இதில் திருவொற்றியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. குப்பன், Paulson Fashions நிறுவனத்தின் இயக்குனர் திரு. சாம்பால், Toni & Guy by Essensuals நிறுவனத்தின் கிளை உரிமையாளர் திரு. Blessing A Manikandan உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அழகு கலை துறையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது TONI&GUY – ESSENSUALS நிறுவனம். இந்த துறையில் பல்வேறுபட்ட புதிய முறைகளை கையாண்டு உலக தரத்திலான அழகு கலைகளை அளித்து வருகிறது TONI&GUY – ESSENSUALS நிறுவனம்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள சென்னை திருவொற்றியூர் கிளையில் அழகு கலை துறையில் அண்மையில் மிகவும் பிரபலமாக உள்ள பல சிகை மற்றும் முழு உடல் அலங்காரங்கள் பற்றி லண்டனில் உள்ள TONI&GUY தலைமையகத்தில் நேரடி பயிற்சி பெற்றவர்கள் திருவொற்றியூர் மக்களுக்காக சேவையாற்ற தயாராகவுள்ளனர். இங்கு 1200 சதுர அடியில் இயங்கிவரும் TONI&GUY – ESSENSUALS கிளையில் சிகை அலங்காரம் முதல் கால் நகங்களை அலங்கரிக்கும் வரை அனைத்து சேவைகளும் கிடைக்கும். குறிப்பாக, Hair Staightning, Hair Coloring, திருமண அலங்காரம், என அழகு கலைத்துறையில் இருக்கும் அனைத்து சேவைகளும் இங்கு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சேவைகள் அளிக்கப்படுவதோடு, அவற்றுக்கான விலையும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

முன்னதாக, TONI & GUY ESSENSUALS நிறுவனத்தின் அழகு கலை நிபுணர்களால் அலங்கரிக்கட்ட அழகிகள் தற்போதைய அழகு கலையை பிரதிபலிக்கும் விதமாக ஒய்யார அணிவகுப்பு நடத்தி காண்பித்தனர். இது, இதுபோன்ற அழகு கலைகள் இனி திருவொற்றியூர் மக்களுக்கும் கிடைப்போகிறதா என்ற வியப்பை பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தியதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறினர்.

இங்கு தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் வாடிக்கையாளர்கள் TONI & GUY ESSENSUALS நிறுவனத்தில் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.