Home -> News -> மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக, பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதியுற்றுள்ளனர்.

ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன் படி வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஊழியர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் சுமார் 3500 பேருந்துகள் இயக்கப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.