Home -> News -> சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் (45) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்னை காரணமாக மயிலாப்பூர் உள்ள அவரது வீட்டில் சங்கர்(45) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சங்கரின் மறைவு இளம் தலைமுறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கரின் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முதன் முதலாக சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பிரபலமான இந்த கல்வி பயிற்சி மையத்தில் படித்த பலர், ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவாகி உள்ளனர். பலர் படித்து வருகின்றனர்.