Home -> News -> தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – மு.க. ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – மு.க. ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அக் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரி திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அரியகுளம், மேலக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மு.க. ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார் . அப்போது தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய ஆட்சியில் கடன் வழங்கப்படாததால் அதிக  வட்டி வசூலிக்கும் தனியார் வங்கிகளுக்கு செல்வதாகவும் கூறினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை . தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார்.