Home -> News -> ஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.

பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஆளுநரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்