Home -> News -> முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக முறைப்படி நேற்று பதவியேற்றார்.இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், மகாராஷ்டிராவின் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன். சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவுக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும் முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரே பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்து என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.