" /> My Title page contents
Home -> News -> Entertainment -> தயாரிப்பாளர் வராகி தன்னை தொலைப்பேசியில் மிரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் – நடிகை ஸ்ரீ ரெட்டி

தயாரிப்பாளர் வராகி தன்னை தொலைப்பேசியில் மிரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் – நடிகை ஸ்ரீ ரெட்டி

நடிகை ஸ்ரீ ரெட்டி, தயாரிப்பாளர் வராகி என்பவர் தொலைப்பேசியில் தன்னை மிரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாகவே திரையுலக பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு அளிப்பதாகக்கூறி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது தனக்கு தொலைப்பேசி மூலம் மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், ” நான் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக சில பிரபலங்களின் மீது குற்றம் சாட்டியிருந்தேன்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருமான வராகி என் முகவரியை அறிந்துகொண்டு, தொலைபேசி மூலம் மிரட்டி வருகிறார். எனக்கு நடந்த இன்னல்களை நான் ஊடகங்களில் எடுத்துரைப்பதால் என்னை விலைமாது என அவதூறாக பேசி வருகிறார். அவருடைய வார்த்தைகள் என்னை மனதளவில் காயப்படுத்திவிட்டது. எனக்கு மிரட்டல்விடும் வராகி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ரெட்டி, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னை வந்தேன். எனக்கு வராகி யார் என்று தெரியாது. ஆனால் எதற்காக என்னிடம் இப்படி மிரட்டல் விடுகிறார் என்று தெரியவில்லை. நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பாக நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் இது குறித்து புகார் தெரிவிக்க முயன்றும் அவர்கள் என்னை மதிக்கவும் இல்லை, என் புகாரை பெற முன்வரவில்லை. நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான உண்மைகளை வெளி கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன்” என கூறினார்.