" /> My Title page contents
Home -> News -> Entertainment -> அதர்வா முரளியின் ‘பூமராங்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

அதர்வா முரளியின் ‘பூமராங்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கும் ‘பூமராங்’ படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள் அர்ஜுன் ரெட்டி’ ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் ரதன் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார் இசையமைப்பாளர் ரதன். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த ‘பூமராங்’ குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இயக்குனர் கண்ணன்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் டிரைலரும் வெளியிடப்பட இருக்கிறது.