Home -> News -> Cinema News -> டாப்சி நடிக்கும் கேம் ஓவர் திரைபடம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

டாப்சி நடிக்கும் கேம் ஓவர் திரைபடம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

விக்ரம் வேதா’ (2017) மற்றும் ‘தமிழ் பாடம் 2’ (2018) வெற்றிக்குப் பிறகு, ஒய் நாட் ஸ்டுடியோ ஏஸ்.சசிகாந்த் தயாரிக்கும் புதிய படம் கேம் ஓவர் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது

தமிழ் சினிமாவில் நயன்தாராவின் ‘மாயா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதனையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கேம் ஓவர்’.

இதில் ஹீரோவாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.   அஸ்வின் சரவணன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் ஓவர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக டாப்சி நடிக்கவிருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இதனை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் சென்னையில் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.