Home -> News -> Cinema News -> தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பரதன் இயக்கத்தில், கமல்ஹாசன் எழுத்தில் 1992ம் ஆண்டில் வெளியான படம் தேவர் மகன் 2. சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், கவுதமி, ரேவதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்தாண்டில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் தேவர் மகன் படம் தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பல பாடல்கள் இன்னும் பிரபலமாக உள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் #DevarMagan2 உருவாக்கப்பட்டு அது இந்தியளவில் டிரெண்டிங்கானது.