Home -> News -> Cinema News -> ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகிறது ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகிறது ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காஞ்சனா 3’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காஞ்சனா 3’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் திகில் கலந்த நகைச்சுவை படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படம் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் திகில் கலந்த நகைச்சுவை படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படம் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது…

சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்…தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது…