Home -> News -> Cinema News -> நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்

நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்

தென்னிந்திய நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்!

பாலிவுட் மற்றும் கோலிவுட்டை திரைப்பட உலகை கலக்கி வரும் மீ டூ புகார்கள், தற்போது கன்னடத் திரைப்பட உலகிலும் வீசத் தொடங்கியுள்ளது. அர்ஜூனுடன் தான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவர் அத்துமீறி நடந்துகொண்டதாக, ட்விட்டரில் ஸ்ருதி கூறியுள்ளார். நிபுணன் திரைப்பட ஷூட்டிங் ஒத்திகையின்போது, தனக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில், விரல்களை படர விட்டதாகவும், அப்படி நடந்துகொண்ட பின், இயக்குனரிடம் அதைப் போல் மீண்டும் செய்யலாமா எனக் கேட்டார்.

முன்கூட்டியே சொல்லாமல் அர்ஜூன் அப்படி பல இடங்களில் தொட்டது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும், அப்போது அதை எதிர்க்க துணிவு இருக்கவில்லை என்றும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.இதனிடையே ஸ்ருதியின் புகார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் அர்ஜூன், பொய்யான புகார் என்று கூறியுள்ளார்.