Home -> News -> Cinema News -> நடிகர் திலீப் – காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை

நடிகர் திலீப் – காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை

நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிக்கு இன்று அதிகாலை அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். இவர், சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மகள் மீனாட்சி, திலீப்புடன் உள்ளார். இவர்கள் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை இருவரும் மறுத்தனர்.

காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து துபாய் சென்ற காவ்யா மாதவன், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்துவிட்டார்.

பிறகு நடிகை காவ்யா மாதவனை கரம் பிடித்தார் நடிகர் திலீப். கடந்த 2016-ல் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. காவ்யா ஏற்கனவே திருமணமாகி 2011-ல் விவாகரத்தானவர்.சில நாட்களுக்கு முன்பு காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது.