Home -> News -> Cinema News -> ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்

ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்

நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், “நான் காந்தியை தான் கதாநாயகனாக வாழ்நாள் முழுவதும் பாவித்து, அவர் குறித்த புத்தகங்களை படித்து வருபவன். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் ஒரு வில்லனை நான் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

பார்த்திபன் படத்தில் ஒத்த செருப்பு என பெயரிட்டுள்ளதால் காந்திக்கு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நான் நினைவுபடுத்த நினைக்கிறேன். ஒருமுறை காந்தி ரயிலில் பயணம் செய்த பொழுது ஒரு செருப்பு தவறி பிளாட்பார்மில் விழுந்து விட்டது. அதன் பின்னர் ரயில் வேகமாக சென்றதால் யாருக்காவது பயன்படும் எனக்கு நினைத்து மற்றொரு செருப்பையும் வீசி எறிந்தார் காந்தி.

எனது மேடையில் நடக்கும் விஷயங்களை கூட நான் அப்படித்தான் நினைக்கிறேன். என்னுடைய எதிரிகள் வீசியதில் ஒரு செருப்பு தான் என் கையில் இருக்கிறது. அந்த மற்றொரு செருப்புக்காக நான் காத்திருக்கின்றேன்” என பேசி பின்னர் பார்த்திபன் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.