Home -> News -> Cinema News -> காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தின் பஸ்ட்லுக் வெளியீடு

காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தின் பஸ்ட்லுக் வெளியீடு

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியானது. காஜல் ‘பரமேஸ்வரி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ரமேஷ் அர்விந்த் இயக்கியுள்ளார்.

கங்கனா ரணாவத் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான ‘குயின்’ (இந்தி) படம் அனைத்து தரப்பினரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று, வசூல் சாதனை செய்தது. இப்போது அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மனு குமரன் தயாரிக்கிறார். தமிழில் தயாராகும் படத்துக்கு, ‘பாரீஸ் பாரீஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பது போல, தெலுங்கில் ‘தட் இஸ் மஹாலக்‌ஷ்மி’ என்ற பெயரில் தமன்னா, மலையாளத்தில் ‘ஸம் ஸம்’ என்ற பெயரில் மஞ்சிமா மோகன் நடிக்க, கன்னடத்தில் ‘பட்டர்ஃப்ளை’ என்ற பெயரில் பருல் யாதவ் நடிக்க ரமேஷ் அர்விந்தே இயக்க என மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.s