" /> My Title page contents
Home -> News -> Entertainment -> போராளி என்ற வார்த்தை கலைஞரையே சாரும் – நடிகர் விஷால்

போராளி என்ற வார்த்தை கலைஞரையே சாரும் – நடிகர் விஷால்

 

போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும் என நடிகர் சங்க தலைவர் விஷால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல் நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும், ஆனால் சிகிச்சையால் மீண்டும் சீரானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்கம், திரைப்பட தாயரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில், “இனி போராளி என்ற வார்த்தை கலைஞரையே சாரும். விடாமுயற்சி எனும் வார்த்தையை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் கூறுவார். அதன்படியே வாழ்ந்தும் வருகிறார். பலரின் உத்வேகம் நீங்கள். வாழ்க்கை குறித்த வேறு ஒரு பரிமாணத்தை எனக்கு நீங்கள் காட்டியுள்ளீர்கள். அன்புக்குரிய தலைவா…. உனக்கு தலைவணங்குகிறேன்…” என தெரிவித்துள்ளார்.