" /> My Title page contents
Home -> News -> Entertainment -> சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் பாடல் வெளியீடு

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவாகார்த்திகேயன் நடித்திருக்கும் சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களுக்கு பிறகு சீமராஜா படம் உருவாகியுள்ளது. இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து 2 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால் சீமராஜா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் சூரி நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். மேலும் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி திரைக்கு வரும் என படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமராஜா படத்தில் ‘வாரேன் வாரேன் சீமராஜா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று மாலை 6 மணிக்கு படக் குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வெளியான ஒரு இரவில் இந்த வீடியோவை 6 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.