" /> My Title page contents
Home -> News -> Entertainment -> சர்வதேச விருது மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் பெயர் பரிந்துரை

சர்வதேச விருது மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் பெயர் பரிந்துரை

ஐஏஆர்ஏ என்கிற சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியலில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார்.

மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்த நடிகர் விஜய்யின் பெயர் ஐ.ஏ.ஆர்.ஏ என்ற சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் விருதுக்கு உலக அளவில் விஜய் உள்பட 8 நடிகர்கள் போட்டியிடுகின்றனர். சிறந்த சர்வதேச நடிகர் பிரிவில் 6 நடிகர்களில் நடிகர் விஜய் இடம் பெற்றுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் – மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் INTERNATIONAL ACHIEVEMENT RECOGNITION AWARDS என்கிற 2018-ம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ விருதுப் பரிந்துரைப் பட்டியல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2014 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தச் சர்வதேச விருதுப் பரிந்துரைப் பட்டியல்களில், இரு பிரிவுகளில் விஜய் இடம்பெற்றுள்ளார். சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என இரு பரிந்துரைப் பட்டியல்களில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் இடம்பெற்றுள்ளார். இந்தப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதிக வாக்குகள் வென்ற நடிகர்கள் விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

அதிக வாக்குப் பெறுவோர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். போட்டியின் முடிவுகள் செப்டம்பர் 22ம் தேதி அறிவிக்கப்படும். இந்தியாவில் இருந்து நடிகர் விஜய் பெயர் மட்டுமே இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.