Home -> News -> Cinema News -> பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..!

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மரணம்..!

திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் 1983-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது புரொடக்ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார்  இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்., வடிவேலுவுடன் நடித்த காமடி காட்சிகள் நம்மில் இன்றளவும் மறக்காத நினைவுகளை பெற்றுள்ளது.

அதில் தவசி , எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பிற்காக குமுளி சென்றிருந்தபோது இன்று காலை 04.30 மணிக்கு அளவில் மாரடைப்பு ஏற்பட்டது இதனால் அவர் உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.