Home -> News -> பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும் – சீமான்

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும் – சீமான்

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்காக நான்குநேரியில் பிரசாரக் கூட்டத்திற்காக வந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும்; மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள்.

யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும். மக்களுக்கான தலைவனை திரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது. நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன்; சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.