Home -> News -> இந்தியா-தெ. ஆப்பிரிக்கா மோதும் 3வது டி-20 : தொடரை கைப்பற்றுமா இந்தியா

இந்தியா-தெ. ஆப்பிரிக்கா மோதும் 3வது டி-20 : தொடரை கைப்பற்றுமா இந்தியா

பெங்களூருவில் இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது 20ஒவர் போட்டி நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20ஒவர் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற முதல் 20ஒவர் போட்டி பலத்த மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மொகாலியில் நடைபெற்ற 2வது 20ஒவர் போட்டியில் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது 20ஒவர் போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும் என்பதால் போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.