Home -> News -> வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியிலுள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 62(33) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக கே.எல்.ராகுல் 52(35) ரன்கள் குவித்தார். வங்கதேசம் தரப்பில் ஷபிக்புல் இஸ்லாம், சௌமயா சர்கார் தலா இரண்டு விக்கெட்டுகள் குவித்தனர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிடான் தாஸ் மற்றும் முகமது நய்ம் களமிறங்கினர். லிடான் தாஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சௌமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மிதுன் 27 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.மறுபுறம் அதிரடியாக ஆடிய முகமது நய்ம் மட்டும் 81 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இறுதியில் வங்கதேசம் அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.