" /> My Title page contents
Home -> News -> மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு

சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது.

தி.மு.க் தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல் நலம் குறித்து அறிந்து கொள்ள பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். ஆனால் யாரும் அவரை நேரில் சந்திக்கவில்லை.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஸடாலின் மற்றும் கனிமொழியிடம் பேசிய அவர், பின்னர் சிகிக்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார். மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதியை நேரில் சந்தித்ததாகவும் அவர் பதிவிட்டு இருந்தார். கடந்த இரண்டு நாட்களில் குடும்பத்தாரை தவிர கருணாநிதியை நேரில் சந்தித்தது வெங்கையா நாயுடுவும், ஆளுநரும் மட்டுமே.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை வெங்கையா நாயுடு நேரில் சந்தித்த புகைப்படும் தி.மு.க சார்பில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் இருந்தனர்.

மேலும் அந்த புகைப்படத்தில் கருணாநிதி எந்த சுவாசக் கருவிகளும் இன்றி இயல்பான நிலையில் இருக்கிறார்.