Home -> News -> National News -> சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் – குடியரசுத் தலைவர்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் – குடியரசுத் தலைவர்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ் அமைப்பின் 4 நாள் உலக மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது “இந்தியாவில் குளிர்கால திருவிழாக்கள் வர தொடங்கி உள்ளன.

இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், மக்கள் சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைத்து பண்டிகைகளையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் கொண்டாட வேண்டும் என பொதுமக்களிடம் சமூக அமைப்புக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.