Home -> News -> National News -> தமிழில் பேச தடை…. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும்….

தமிழில் பேச தடை…. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும்….

ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் இடையே ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை!!

இந்த நிலையில் தெற்கு ரயில்வே ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்,தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க, தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்றும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரயில்வேயில் வடமாநிலத்தவர் சேர்க்கைக்கு எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில் தற்போது தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற வேண்டும் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.