Home -> News -> National News -> காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 8.09 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.இந்நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டின் இருபுறமும் கடந்த 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் 80,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது