Home -> News -> National News -> டெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

டெல்லி ஹோட்டல் தீ-விபத்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக .தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 26 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.