Home -> News -> National News -> இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வருகை

இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வருகை

சர்வதேச சவால்களை சமாளிக்க இந்தியா – இத்தாலி நாடுகள் கூட்டணி அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

புது டெல்லியில் நடைபெற்ற இந்தியா – இத்தாலி இடையிலான தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பம் உள்ளூர் சார்ந்ததாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டு இந்திய – இத்தாலி தொழில்நுட்ப உச்சிமா நாட்டில் இத்தாலிய பிரதமர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இந்த நாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வந்தார். டெல்லி வந்த அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், சுகாதாரம், விண்வெளி ஆய்வு, கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன.