Home -> News -> National News -> இந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி

இந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி

இந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா- ரஷியா இடையேயான 19-ஆவது வருடாந்திர மாநாடு, டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபர் புதின், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். புதினை, விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் புதின், லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்குச் சென்றார்.

அங்கு புதினை வரவேற்ற பிரதமர் மோடி, அவருக்கு சிறப்பு விருந்தளித்தார். இதுதொடர்பாக, மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினை வரவேற்கிறேன். அவரது வருகையால், இந்தியா-ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். புதினுடன் ரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ், தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.