" /> My Title page contents
Home -> News -> National News -> நாளை மிகப்பெரிய சந்திர கிரகணம்

நாளை மிகப்பெரிய சந்திர கிரகணம்

மிகப்பெரிய சந்திர கிரகணம் நாளை தோன்றவுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விடும். இதன் காரணமாக முழுச் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில், வருகிற ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திரக் கிரகணம் தோன்றவுள்ளது.

மேலும் கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திர கிரகணம் என்றும் இது ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பிய, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்றும், வட அமெரிக்கா, ஆர்டிக், பசிபிக் பகுதிகளில் முழுமையாகவே தெரியாது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரகணத்தின் போது நிலவின் வெளிச்சம் குன்றி, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். கடந்த ஜனவரி 31ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து நாளை ஏற்படவுள்ளது. இது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக, 1 மணி 43 நிமிடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கிரகணம், கெய்ரோவில் இரவு 9.30 மணிக்கு தென்படும். மாஸ்கோவில் இரவு 10.30 மணிக்கும், டெல்லியில் இரவு 10.44 மணிக்கும் தெரியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும். தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். இந்த முழு சந்திர கிரகணம் மொத்தம் 102 நிமிஷங்கள் நிகழ உள்ளது. இது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும். இதனை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு விளையாது.