" /> My Title page contents
Home -> News -> National News -> புதுடெல்லியில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களின் மாநாடு

புதுடெல்லியில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களின் மாநாடு

புதுடெல்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் நடத்திய மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை​ ​அமைச்சர்களின் மாநாடு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி
தலைமையில் இன்று (17 – 07-2018) நடைபெற்றது

இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட அமைச்சர்​ டாக்டர் வி. சரோஜா கலந்து கொண்டார் , மாநாட்டு​க்​​ ​கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக தமிழ்நாடு பல்வேறு முன்னோடி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும் குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம்,பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் போன்ற திட்டங்கள் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் கூறினார்கள் மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவற்றிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கிட கோரிக்கை வைத்தார்கள். அதுபோல ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்​ கீழ் நகர்புறப் பகுதிகளில் அங்கன்வாடி மைய்யங்கள் கட்ட சிறப்பு நிதி வழங்கவும் கோரிக்கை வைத்தார்கள். இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை முதன்மை செயலாளர்​ டாக்டர்.கே.மணிவாசன் ஆகியோர் கலந்து கொண்டார்.