Home -> News -> National News -> புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி மீது முதல்வா் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி மீது முதல்வா் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் 85 லட்சம் நிதி முறைகேடு செய்து உள்ளது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை துணைநிலை ஆளுநா் கிரண்பேடிக்கும், முதல்வா் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் துணைநிலை ஆளுநா் மீது முதல்வர் நாராயணசாமி திடீரென ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சி.ஆா்.எஸ். திட்டத்தில் ஆளுநா் மாளிகையை காண்பித்து கிரண்பேடி ரூ.85 லட்சம் அளவில் வசூலித்ததாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பணம் வசூல் செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கிடையாது எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநா் மீதான ஊழல் குற்றச்சாட்டு புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.