Home -> News -> National News -> ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

India’s Prime Minister Narendra Modi is seen at the G20 summit in Hamburg, Germany July 7, 2017. REUTERS/Wolfgang Rattay

ஜப்பானில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேசும் பிரதமர் மும்பை-ஆகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் நாளை(28-ம் தேதி), நாளை மறுநாள்(29-ம்தேதி) ஆண்டு உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தனிவிமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி ஜப்பான் புறப்படும் முன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியாவும், ஜப்பானும் சிறந்த வெற்றிக்கூட்டணி நாடுகள். பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப நவீனமயமாக்குதலில் இந்தியாவின் நம்பகமான நாடான ஜப்பானுடனான நட்பு சமீபகாலமாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் பிரதமரைச் சந்தித்தேன், அதன்பின் இப்போது 12-வது முறையாக அவரைச் சந்திக்கச் செல்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இரு நாடுகளும் பல்வேறு உயர்ந்த மதிப்பு மிக்க விஷயங்களை பகிர்ந்து கொண்டு, இருதரப்பும் அமைதி,வளர்சிக்காவும் உழைக்கின்றன அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம் இரு நாடுகளுக்கு இடையிலான உயர்ந்த, வலிமையான பொருளாதார கூட்டுறவைக் குறிக்கிறது. நம்முடைய நாட்டின் முக்கிய கொள்கைகளான மேக் இன் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றில் ஜப்பான் நாடு பங்கேற்றுள்ளது. நம்முடைய நாட்டின் எதிர்காலத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் ஜப்பானிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த மாநாட்டின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்களுடனும், பல்வேறு நாடுகளின் நிறுவனத் தலைவர்களுடன் கலந்து பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜப்பானில் வாழும் இந்திய மக்கள் முன் நான் உரையாற்ற இருக்கிறேன். இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு வலுப்பெறும், முதலீடு பெருக்கம் ஏற்படும், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம்,வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் துறை, பேரிடர் மேலாண்மை, கட்டமைப்புதுறை ஆகியவற்றில் கூட்டாக இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.