Home -> News -> National News -> நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5 மற்றும் 20-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 1.3 லட்சம் பேர் அத்தேர்வை எழுதினர். தேசிய தேர்வு முகமையின் தகவலின்படி நாடு முழுவதும் அத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் முடிவுகள் நாளை புதழ்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது. தேர்வின் முடிவுகளை தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx) சென்று தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.