Home -> News -> National News -> வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் வெளிநாட்டு இந்தியர்களின் மாநாடான 15வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு நேற்று துவங்கியது. இந்த 3 நாள் மாநாட்டின் முக்கிய விருந்தாளியாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் கலந்து கொண்டார்.இந்த வருட மாநாடு புதிய இந்தியாவின் வடிவமைப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்கு (Role of Indian diaspora in building new India) என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டினர் அனைவரும் கும்பமேளாவில் பங்கு பெறவும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவும் வசதியாக மாநாட்டின் தேதி ஜனவரி 9ம் தேதியில் இருந்து 21 முதல் 23ம் தேதியாக மாற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநாட்டை தலைமை தாங்கி துவக்கி வைத்து உரையாற்றினார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவின் சிறந்த தூதர்கள் என நான் கருதுகிறேன். அவர்கள் அனைவரும் நம் தேசத்தின் பல்வேறு திறமைகளின் அடையாள சின்னங்களாக உள்ளனர்.

இந்தியர்கள் பல மொரீஷியஸ், அயர்லாந்து, போர்த்துகல் போன்ற பல நாடுகளில் தலைவர்களாக பணியாற்றுகிறார்கள் என மோடி பாராட்டினார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு ரூபாயில் வெறும் 15 பைசா மட்டும் தான் மக்களை சென்றடைவதாக கூறினார். இந்த நிலையை தடுக்க காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை.ஆனால் பாஜக அரசு இதை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 85 சதவீத கொள்ளை, பாஜக அரசில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 100 சதவீதம் முறியடிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் 5,80,000 கோடி ரூபாயை அவர்கள் வங்கி கணக்கு மூலமாக அளித்துள்ளோம். பழைய நடைமுறைகளில் இந்தியாவின் நிர்வாகம் நடந்திருந்தால் 4,50,000 கோடி ரூபாய் மாயமாகி இருக்கும். இந்த ஊழலை முன்பே தடுத்திருக்க முடியும். ஆனால் அதற்கான சக்தியோ விருப்பமோ காங்கிரஸ் அரசுக்கு கிடையாது. ஆனால் அரசு அளிக்கும் மானியங்கள் அனைத்தும் மக்களுக்கு அவர்கள் வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக செல்வதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*