" /> My Title page contents
Home -> News -> National News -> மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு

டெல்லியில் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பா.ஜ., கூட்டணி வேட்பாளரான ஹரிவன்ஷ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஹரிபிரசாத் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் ஓட்டளிக்காமல் புறக்கணிக்க போவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளிக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சி எம்.பி.,க்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.