Home -> News -> National News -> டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம்

டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம்

டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை . வழங்கியது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலைச் சின்னம் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை, இனி வரும் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) வழங்கியது.

அதில், டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.