Home -> News -> National News -> நாடு முழுவதும் ட்ராயின் புதிய கட்டணம் இன்று அமல்

நாடு முழுவதும் ட்ராயின் புதிய கட்டணம் இன்று அமல்

தொலைக்காட்சி சேனல்களுக்கான டிராயின் புதிய கட்டணத் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

பிரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தி, செட் டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி சேவையை பெறும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்களை நாம் பெற முடியும். தூர்தர்சனின் 25 சேனல்களும் அதில் அடங்கும். மற்ற 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஜனவரி கடைசி நாளான நேற்றே வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே டிராய் அறிவித்திருந்தது. பிப்ரவரி மாதத்திற்கான கட்டணத்தை, நேற்று வரை பிரீபெய்டு முறையில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய கட்டண விதிமுறை தொடர்பான டிராயின் உத்தரவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.