Home -> News -> National News -> திருப்பதி திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

திருப்பதி திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

திருப்பதி திருமலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதிக்க உள்ளது.

கீழ் திருப்பதியில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டள்ள நிலையில் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிப்பது குறித்து, திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இதைத் தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள்பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது.

சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் லட்டுகள் தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளனர்.