Home -> News -> National News -> மத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி

மத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளூர் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் மம்தா பானர்ஜி இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று 3ஆவது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பிற்கு பிறகு இன்று தர்ணா போராட்டத்தை மம்தா முடித்துகொண்டார். இதனால் மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.