" /> My Title page contents
Home -> News -> National Politics -> இந்து பாகிஸ்தான் என்ற கருத்தில் பின்வாங்கப் போவதில்லை – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்

இந்து பாகிஸ்தான் என்ற கருத்தில் பின்வாங்கப் போவதில்லை – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தமது அலுவலகத்தை பாஜகவினர் தாக்கி சேதப்படுத்தியதாக கூறியுள்ளார்.

தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று தெரிவித்த சசி தரூர், இந்து பாகிஸ்தான் என்ற கருத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.