" /> My Title page contents
Home -> News -> National Politics -> தமிழகத்தின் சிறந்த மகன் என ஸ்டாலினை பாராட்டிய ராகுல் காந்தி

தமிழகத்தின் சிறந்த மகன் என ஸ்டாலினை பாராட்டிய ராகுல் காந்தி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கையில் எடுக்கும் மகளிர் மசோதாவிற்கு ஆதரவளிப்பதாக கூறி இருந்தார். இதைப் பாராட்டிய ”உண்மையான தலைவர், தமிழகத்தின் சிறந்த மகன்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் ஸ்டாலின் குறித்துப் பதிவிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள மகளிர் மசோதாவை நிறைவேற்றும்படி கோரி ராகுல், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த முயற்சியில் தமது கட்சி சார்பில் ராகுலுக்கு மனமார்ந்த ஆதரவை அளிப்பதாகக் கூறி டிவீட் செய்திருந்தார் ஸ்டாலின். தேர்தல் அமைப்புகளில் பெண்கள் ஒதுக்கீட்டிற்காக திமுக தலைவர் ஆதரவு அளித்து வந்தார் எனக் குறிப்பிட்டவர், மகளிர் மசோதா விரைவில் நிறைவேற்ற தாமும் பிரதமர் அலுவலகத்திடம் வலியுறுத்தி இருந்தார்.

இதைப் பாராட்டிய ராகுல் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், ”நன்றி ஸ்டாலின்! நீங்கள் உண்மையான தலைவராகவும், தமிழகத்தின் சிறந்த மகனாகவும் பேசியுள்ளீர். இந்தியப் பெண்கள் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் முக்கியமானவர்கள். இதை உண்மை என மகளிர் மசோதா நிரூபிக்கும். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டிய தருணம் இது” என பதிவிட்டுள்ளார்