" /> My Title page contents
Home -> News -> திருக்குவளையிலிருந்து கருணாநிதியைப் பார்க்க வந்த மூதாட்டி

திருக்குவளையிலிருந்து கருணாநிதியைப் பார்க்க வந்த மூதாட்டி

சென்னைக்கு தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்க்க திருக்குவளையிலிருந்து மூதாட்டி ஒருவர் தனியாக வந்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தர தொடங்கினர். இதையடுத்து நேற்றிரவு முதலே தொண்டர்கள் கோபால புரத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். கலைஞர் வீட்டுக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.இதில் குறிப்பாக, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையைச் சேர்ந்த 85 வயது ரத்தினம் என்னும் மூதாட்டி, கருணாநிதி உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் இன்று அதிகாலையே பேருந்து ஏறி சென்னை வந்துவிட்டார். கோபாலபுரத்தில் அவரைக் கண்ட தி.மு.க தொண்டர்கள் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்துள்ளனர்.

அதற்கு அந்த மூதாட்டி தன் பெயர் ரத்தினாம்பாள் (85) என்றும் தான் திருக்குவளையிலிருந்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் நேற்றிரவு முதலே கருணாநிதியின் உடல்நிலை குறித்த தகவல்கள் பரவி கொண்டிருந்த நிலையில் கருணாநிதியை நேரடியாக பார்க்க வந்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து திமுக நிர்வாகி சேகர்,மு.க. ஸ்டாலினிடம் கூற, அவர் ரத்தினாம்பளை அழைத்து சிகிச்சையிலிருப்பதால் கருணாநிதியை தற்போது சந்திக்க முடியாது என்றும் அவர் நலமுடன் உள்ளதாக தெரிவித்தாராம். இந்த நிகழ்வை சிவகுமார் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.