Home -> News -> வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு

வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி .கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்தவண்ணமே உள்ளது. தீபாவளிக்கு பிறகு விலையானது கடும் உச்சத்தை எட்டியுள்ளது .இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவஸ்தி அடைந்துள்ளனர் .

இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை 150 யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.பெரிய வெங்காயத்தின் விலை 140 க்கும் சின்ன வெங்காயத்தின் விலை 180 க்கும் விற்கப்படுகிறது.வடமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவு குறைந்ததே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறதும்.

வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து 100 டன் வரும் வெங்காயத்தின் அளவு 35 டன்னாக குறைந்துள்ளது .இதனிடையே வெங்காயத்தினை இருப்பு வைத்திருப்போருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.