Home -> News -> உலக கோப்பை கிரிக்கெட் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பாஃகர் ஜாமன் 0(2), 36(51) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் பாபர் ஆஜம் 45(51) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் இடையில் ஊசலாட, பாகிஸ்தான் அணியின் இமாட் வாஷிம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49*(54) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தின் 49.4-வது பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்த பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  1. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி வாப்பை பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியது.