Home -> News -> Sports -> ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ-பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்திக்கின்றன.

இதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இந்நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை அணியை இன்று எதிர்கொள்கிறது.

ஷிகர் தவான், தோனி, ராயுடு ஆகியோர் நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஷஹின் அப்ரிடி, உஸ்மான்கான், அமீர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி உள்ளது. இந்த இரு அணிகளும் மோதுவது பெரும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.